தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? - எச்.ராஜாவின் சர்ச்சை ட்வீட்

பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழிக்கு இடையே ட்விட்டரில் காரசாரமான விவாதம். கனிமொழியின் ட்வீட்டுக்கு எச்.ராஜா, "தமிழகத்தில் உள்ள ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா?" என்று பதிவிட்டுள்ளார்.
 | 

தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? - எச்.ராஜாவின் சர்ச்சை ட்வீட்

பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் திமுக மகளிரணித் தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி ஆகிய இருவருக்கும் இடையே ட்விட்டரில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. 

கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "உயிரற்ற படேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்!" என ட்வீட் செய்துள்ளார். 

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எச்.ராஜா, "குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா?" என்று பதிவிட்டுள்ளார். 

ஏற்கனவே தமிழ்கத்தில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், எச்.ராஜா இவ்வாறு கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP