திமுகவில் இணைந்தார் அமமுக மாவட்ட செயலாளர் பரணி!

புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளர் பரணி கார்த்திகேயன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
 | 

திமுகவில் இணைந்தார் அமமுக மாவட்ட செயலாளர் பரணி!

புதுக்கோட்டை மாவட்ட  அமமுக செயலாளர் பரணி கார்த்திகேயன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதையடுத்து அதிமுக கட்சிக்குள் குழப்பமும், விரிசலும் ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து பிரிந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக என்ற புதிய கட்சி உருவானது. தற்போது, அமமுக கட்சி உறுப்பினர்கள் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தாவி வருகின்றனர். ஏற்கனவே அமமுக கொள்ளை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் கலைராஜன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமமுகவை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இவர், அதிமுக எம்.எல்ஏ ரத்தின சபாபதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP