அ.ம.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியாது: ஓ.பி.எஸ்.,

4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று, மதுரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 | 

அ.ம.மு.க.,வால்  ஒன்றும் செய்ய முடியாது: ஓ.பி.எஸ்.,

"நான்கு தொகுதி சட்டசபை  இடைத்தேர்தலில், அ,தி,மு,க., அமோக வெற்றி பெறும். தினகரன் தலைமையிலான அமமுக.,வால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று ,தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்படுவர். நான்கு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். மதுரை மக்களவை தேர்தலில், திருவிழா காரணமாக சரியான வாக்குகள் பதிவாகவில்லை" என்றார். 

மேலும், அமமுக தனிக்கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்விக்கு ? அமமுக ஒருபோதும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP