4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக எளிதாக வெற்றி பெறும்! - புகழேந்தி

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த தொகுதிகளிலும் எங்களது கட்சி எளிதாக வெற்றி பெறும்- அமமுக
 | 

4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக எளிதாக வெற்றி பெறும்! - புகழேந்தி

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டசபை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி புகழேந்தி, "திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த தொகுதிகளிலும் எங்களது கட்சி எளிதாக வெற்றி பெறும். 

மக்களவை தேர்தல், 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அமமுக கட்சி அமோக வெற்றி பெறும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP