அமித் ஷாவின் அடுத்த இலக்கு தமிழகம்: கேடயமாய் குப்புராமு!

நாடு முழுவதும், பாஜகவை வலுப்படுத்த சாதாரண பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடியை, வாஜ்பாயும், அத்வானியும் எப்படி இனம் கண்டனரோ, அப்படித்தானே, கட்சியின் மாநில துணை தலைவராக உள்ள குப்புராமுவை, அமித் ஷாவும், பிரதமர் மோடியும் அடையாளம் கண்டுள்ளதாக, ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 | 

அமித் ஷாவின் அடுத்த இலக்கு தமிழகம்: கேடயமாய் குப்புராமு!

காஷ்மீர் விவகாரத்தில் 70 ஆண்டுகளாக தேச நலனுக்கு குந்தகம் விளைவித்து வந்த பிரிவினைவாதிகள் ஆட்டத்தை, ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவந்த மத்திய அரசு, தற்போது தன பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது. 

பொதுநலன் என்ற போர்வையில் தேசத்திற்கு எதிரான போராட்டத்தையும், அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்த்தும் வரும் போராட்டக்காரர்கள் போர்வையில் திரியும் பிரிவினைவாதிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது, அஸ்திரம் தொடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தயாராகிவிட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து, பாஜக உள்வட்டாரங்களில் மேலும் பேசப்படுவதாவது:பொதுமக்கள் முன்னெடுத்து சென்ற, ஜல்லிக்கட்டு பபோராட்டத்தில் மெல்ல மெல்ல ஊடுருவிய, பிரிவினைவாதிகள், கடைசியில் அதை கலவரமாக மாற்றினர். உண்மையில் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள், அரசு அனுமதித்ததும், தங்கள் கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்து, மெரீனாவிலிருந்து களைத்து சென்றனர். 

ஆனால், கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் ஒன்று கூடிய பிரிவினைவாதிகள், அங்கிருந்து களைந்து செல்ல மறுத்து, போலீசுக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை அடக்க போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளை சில ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும், திட்டமிட்டு அரசுக்கு எதிரான தகவல்கள் பரப்பப்பட்டன. 

அமித் ஷாவின் அடுத்த இலக்கு தமிழகம்: கேடயமாய் குப்புராமு!

எனினும் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்த பொதுமக்கள், பிரிவினைவாதிகளுக்கு பலியாகாமல், நடுநிலை காத்தனர். இதே போல், காவிரி டெல்டா பகுதிகளில், மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டம், ஹைட்ரோகார்பன் போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், அதில் மானவி அனிதா தற்கொலையை மையப்படுத்தி போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி, மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இவர்களில் பொதுமக்களை விட குறிப்பிட்ட அமைப்பினர் அதிகம் என்பது, உளவுத்துறை அறிக்கை மூலம் மத்திய அரசுக்கு அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. பீல்டு அவுட் ஆன நடிகர்கள், இயக்குனர்கள், மாற்று மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதற்காக வெளிநாட்டு மிஷினரிகளிடமிருந்து கூலி வாங்கும் கைக்கூலிகள் என அனைவரது பட்டியலும் அரசுக்கு சென்றுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில் உள்துறை அமைச்சக உளவுத்துறை அறிக்கையில், தமிழகத்தில் இயங்கும், தனியார் தொண்டு அமைப்புகள், அதற்கான நிதி ஆதாரங்கள், எந்த நாடுகளிலிருந்து நன்கொடைகள் வருகின்றன, இதுவரை வந்துள்ளன என்பது குறித்த அனைத்து தகவல்களும், உள்துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாம். அதில், சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சிறுபான்மையினர் கல்லூரி நிர்வாகத்திற்கு முக்கிய தொடர்பு இருப்பதாவதும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கல்லூரியில் நடந்த ஓவிய கண்காட்சியில்தான், ஹிந்து மத கடவுள்கள் மற்றும் அதன் சின்னங்களை இழிவுபடுத்தும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றன. ஹிந்துத்வ அமைப்புகள் மற்றும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த ஓவியங்கள் திரும்பப்பெறப்பட்டன. 

அமித் ஷாவின் அடுத்த இலக்கு தமிழகம்: கேடயமாய் குப்புராமு!
இந்நிலையில், தொடர்ந்து அரசின் திட்டங்களை எவ்வித காரணமும் இன்றி எதிர்த்து வரும், நடிகர்கள், நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள், நடுநிலையாளர்கள் போர்வையில் நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவோர் என அனைவரின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. 

2014ம் ஆண்டே மத்தியில் ஆட்சி அமைத்து விட்ட பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, அப்போதிருந்தே காஷ்மீர் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வந்தது. பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலை நியமித்து. அங்குள்ள பிரிவினை வாதிகள் குறித்து தகவல் சேகரித்து, சத்யபால் மாலிக்கை கவர்னராக நியமித்து, சட்டம், ஒழுங்கை கண்காணித்து, அதற்கு முன் அங்குள்ள பிடிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து, அங்குள்ள அரசியல், பொருளாதார நிலைமைகளை மாநில அரசின் ஓர் அங்கமாகவே இருந்து கவனித்து, மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததும், அமித் ஷாவை உள்துறை அமைச்சராக பொறுப்பேற்கச் செய்து அதன் பின் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டது. 

கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் திட்டமிட்டு மத்திய பாஜக அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதன். விளைவு, அந்த மாநிலத்தில், பிரிவினைவாதிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் யூனியன் பிரதேசமானதற்குப்பின் ஒரு பயங்கரவைத்த சம்பவம் கூட நிகழவில்லை. அங்கு நட்சத்திர விடுதி கட்டவும், மலையேற்ற பயிற்சி மையம் அமைக்கவும், மகாராஷ்ட்ரா மாநில அரசு முன்வந்துள்ளது. இனி அந்த பகுதி அமைதியுடன் கூடிய வளர்ச்சி அடைவதை யாராலும் தடுக்க முடியாது. 

இதுபோலத்தான், தமிழகத்தை திசை மாற்ற துடிக்கும் தேச விரோத சக்திகளை ஒடுக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார். தனி தமிழ்நாடு, தனி திராவிடம், மொழி, இன, மத ரீதியில் மக்களை பிரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் மத்திய புலனாய்வு அமைப்பு கண்காணித்து வருகிறது. 

காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே  ஊழல் பெருச்சாளிகள், அதிகார துஷ்ப்ரயோகம் செய்வோர் என அனைவர் மீதும் நடவடிக்கை பாய உள்ளதாம். அதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது, பாஜக மாநில தலைவரை அணுகி, மத்திய அரசுடன் நெருக்கம் காட்டி நடவடிக்கையிலிருந்து சிலர் தப்ப முயலலாம். 

அது போன்ற சமயத்தில், தமிழக பாஜக தலைவராக இருக்கும் நபர், எந்த அரசியல் கட்சி தலைவர்களிடமும் சமரசம் செய்யாத நபராக இருக்க வேண்டும் என அமித் ஷா விரும்புகிறாராம். தவிர, ஊடக வெளிச்சத்தை விரும்பாத, கொள்கை பிடிப்புள்ள நபர் மட்டுமே அடுத்த தலைவராக இருக்க வேண்டும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். 

அமித் ஷாவின் அடுத்த இலக்கு தமிழகம்: கேடயமாய் குப்புராமு!

தற்போது மக்கள் மத்தியில் பரிச்சயமாக உள்ள தலைவர்கள், சந்தர்ப்ப சூழ்நிலையாலும், தமிழக அரசியல் கலாச்சாரத்திற்கே உரிய வகையிலும் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். அவர்களை போல் அல்லாமல், இதுவரை ஊடக வெளிச்சமே படாத அதே சமயம், கட்சியின் கொள்கை பிடிப்போடு, தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.,ல் நீண்ட நெடுங்காலமாக மக்கள் பணியாற்றிய ஒருவரையே தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக, அமித் ஷா தேர்வு செய்துள்ளாராம். 

ஆம், இந்த நபர், ராஜ்நாத் சிங்கால் நேரடியாக அடையாளம் காணப்பட்டு, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர். ராஜ்நாத் பாஜக தலைவராக  இருந்த போது, அவரே நேரடியா இவரை அழைத்து, உங்களைப்போன்ற நபர்கள் தேர்தல் அரசியலில் களம்காண வேண்டும் என வலியுறுத்தி, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தாராம். 

நாடு முழுவதும், பாஜகவை வலுப்படுத்த சாதாரண பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடியை, வாஜ்பாயும், அத்வானியும் எப்படி இனம் கண்டனரோ, அப்படித்தானே, கட்சியின் மாநில துணை தலைவராக உள்ள குப்புராமுவை, அமித் ஷாவும், பிரதமர் மோடியும் அடையாளம் கண்டுள்ளதாக, ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள ஆபரேஷன் தமிழ்நாடுவுக்கு எதிராக அடிக்கும் அலைகளை சமாளிக்கவும், அமித் ஷாவின் வியூகங்களை, எவ்வித லாபியோ, சமரசமோ இல்லாமல் செயல்படுத்தவும், குப்புராமுவை தமிழக பாஜக தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்து விட்டதாகவும், இதுகுறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பு மட்டுமே இன்னும் வெளியாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 

தேச விரோதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக தொடுக்கும் போரில், தமிழக மக்களுக்கு எவ்வித சேதாரமும் இன்றி பார்த்துக்கொள்ள, குப்புராமுவை தன் கேடயமாக பயன்படுத்தஅமித் ஷா தயாராகிவிட்டதாகவே, பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சாட்டையை சுழற்றும் பாஜக தலைவர் அமித் ஷா: தமிழக தளபதியாய் குப்புராமு!

'தமிழக பாஜகவின் புதிய தலைவர் குப்புராமு !'

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP