அமித் ஷா தலைமையில் சென்னையில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
 | 

அமித் ஷா தலைமையில் சென்னையில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை தந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

மேலும், கனமழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட அமித் ஷா இன்று கர்நாடகா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP