டி.டி.வி.தினகரனுடன் இணைகிறேனா? சோலார் பேனல் சரிதா நாயர் விளக்கம்!

டிடிடி.தினகரன் கட்சியில் இணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை கேரளாவின் சரிதா நாயர் மறுத்துள்ளார்.
 | 

டி.டி.வி.தினகரனுடன் இணைகிறேனா? சோலார் பேனல் சரிதா நாயர் விளக்கம்!

டிடிடி.தினகரன் கட்சியில் இணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை கேரள அரசியலில் புயலை கிளப்பிய சர்ச்சைக்குரிய சரிதா நாயர் மறுத்துள்ளார்.
கேரளாவில், 'சோலார் பேனல்' மோசடி வழக்கில் சிக்கியவர், சரிதா நாயர். அவர், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி மீது புகார் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த புகாரால், உம்மன் சாண்டி செல்வாக்கு சரிந்தது. பல ஆபாச, 'சிடி'க்கள் இருப்பதாகக் கூறிய சரிதா, கடைசி வரை எதையும் வெளியிடவில்லை.கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர் , குமரி மேற்கு மாவட்டம் தக்கலை பகுதியில் சிறு தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தார். இதற்காக அடிக்கடி குமரி மாவட்டம் வந்து களியக்காவிளை, நாகர் கோவில் பகுதிகளில் தங்கினார். தற்போது தக்கலையில் பேப்பர் கப் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். 
குமரி மாவட்டத்தில் தங்கி இருக்கும் சரிதா நாயருக்கு சில அரசியல் பிரமுகர்களின் பழக்கம் கிடைத்தது. இந்த நிலையில் அவர் நேற்று திடீரென நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும், அமமுக குமரி மாவட்ட செயலாளருமான பச்சைமாலை சந்தித்தித்தார். இதனால் சரிதா டிடிவி.தினகரன் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக டி.டி.வி. தினகரனுடன் பேசி நேரம் வாங்கித்தரும்படியும் சரிதா கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது. டி.டி.வி.தினகரனுடன் இணைகிறேனா? சோலார் பேனல் சரிதா நாயர் விளக்கம்!
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சரிதா நாயர், "தமிழகத்தில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையும்படி எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், கட்சியில் சேருவது குறித்து நான் இதுவரை முடிவு எடுக்கவில்லை. பச்சைமாலை சாதரணமாகவே சந்தித்தேன். அ.ம.மு.க. கட்சியில் சேரும்படி எனக்கு ஏன் அழைப்பு வந்தது எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசியல் குறித்து எனக்குத் தெரியவில்லை. இதுபற்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. தீர ஆலோசித்துத்தான் முடிவு எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP