நான் பாஜகவுக்கு செல்கிறேனா?: ஓபிஎஸ் விளக்கம்

தான் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வதாக கூறுவது வடிகட்டிய பொய் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று விளக்கமளித்துள்ளார்.
 | 

நான் பாஜகவுக்கு செல்கிறேனா?: ஓபிஎஸ் விளக்கம்

தான் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வதாக கூறுவது வடிகட்டிய பொய் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக பன்னீர் செல்வம் அளித்த விளக்கத்தில், ‘ நான் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்கிறேன் என்பது வடிகட்டிய பொய். பாஜகவுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளியை அவதூறாக பரப்புகின்றனர். அதிமுகவில் எளிய தொண்டனாக இருந்து கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன். உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன்' என்றார்.

மேலும், ‘என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும் பொய் குற்றச்சாட்டுகளையும் மக்கள் ஏற்கமாட்டார்கள். மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் வெற்றியை நினைத்து சில குள்ளநரிகள் என் மீது வதந்தி பரப்புகின்றனர். என் மீது வதந்தி பரப்பி என் அரசியல் வாழ்க்கையை காயப்படுத்த அலைவதை  நினைத்து வேதனைப்படுகிறேன்’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP