அதிமுக கூட்டணி சக்தி வாய்ந்த கூட்டணி: பியூஷ் கோயல் 

ஆலோசனைக்குப் பின்னர், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பியூஷ் கோயல், அதிமுக கூட்டணி சக்தி வாய்ந்த கூட்டணி என்றும், திமுக கூட்டணியை தோற்கடிப்போம் எனவும் பேசினார்.
 | 

அதிமுக கூட்டணி சக்தி வாய்ந்த கூட்டணி: பியூஷ் கோயல் 

அதிமுகவின் தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் தொகுதி ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

பாஜக சார்பில் பியூஷ் கோயல், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும்,  பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தியும் ஆகியோரும், அதேபோல், ஜி.கே.வாசன், சுதீஷ், ஏ.சி. சண்முகம் டாக்டர்.கிருஷ்ணசாமி,  உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக்குப் பின்னர், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பியூஷ் கோயல், அதிமுக கூட்டணி சக்தி வாய்ந்த கூட்டணி என்றும், திமுக கூட்டணியை தோற்கடிப்போம் எனவும் பேசினார். 

மேலும், மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP