அரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக அமைச்சர் ஓ.எஸ் மணியன் விமர்சித்துள்ளார்.
 | 

அரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக அமைச்சர் ஓ.எஸ் மணியன் விமர்சித்துள்ளார். 

நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், " திமுக தலைவர் ஸ்டாலின், அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற வகையில் பேசி வருவதாகவும், முதல் நாள் ஒன்றும், மறுநாள் அதை மாற்றி பேசுவதும் ஸ்டாலினுக்கு சகஜமாகிவிட்டதாகவும் கூறினார். மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக போராட்டம் குறித்து ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசுவதாகவும், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சட்டம்- ஒழுங்கை கடைபிடித்ததை போன்று காஷ்மீர் விவகாரத்தில் திமுகவினர் சட்டம்-ஒழுங்கை கடைபிடிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். 

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதில் தமிழக போலீசார் முழுகவனத்துடன் திறமையாக செயல்படுவார்கள் என்றும், இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP