அனைத்து புத்தகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்: தினகரன்!

தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
 | 

அனைத்து புத்தகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்: தினகரன்!

தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தில் வழங்கப்பட்ட பிளஸ் 2 ஆங்கில பாடப்புத்தகத்தில் மொழிகள் குறித்த ஒரு பிரிவில், தமிழ் கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்து குறைகளைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்றும், பிழையான பாடங்கள் கற்பிப்பதைத் தடுக்க சிறப்பு ஆய்வுக்குழு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், வரலாற்றைத் திரித்து பாடங்கள் தயாரித்தவர்களை அரசு சார்ந்த குழுக்களில் இடம் பெற தடை விதிக்க வேண்டும் என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

newstm.in

:

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP