கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய அதிமுக எம்எல்ஏ

’அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்கு விலகுகிறேன்’ என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
 | 

கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய அதிமுக எம்எல்ஏ

"அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன்’ என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், அதிமுகவில் இருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் இன்று அறிவித்தார்.  இதனைத்தொடர்ந்து சேலத்தில் அவர், முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். 

இந்தச் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு தோப்பு வெங்கடாசலம் அளித்த பேட்டியில், ‘அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன். விலகும் கடிதத்தை முதல்வரிடம் அளித்துவிட்டேன்; இனி முதல்வரே முடிவெடுப்பார். தேர்தல் கருத்துக் கணிப்பு அதிமுகவிற்கு எதிராக வந்ததால் நான் விலகியதாக கூறுவது தவறு. அதிமுகவில் கடைசி வரை அடிமட்ட தொண்டனாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP