மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீராக அதிமுக உள்ளது : ஓபிஎஸ்

தமிழக மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீராக அதிமுக உள்ளதாகவும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு என்றும் இருக்கும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ’தமிழக மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீராக அதிமுக உள்ளது. அதை இடைத்தேர்தலில் மக்கள்  நிரூபித்துள்ளனர். இறைவன்  நல்லவர்களை சோதிப்பான்; ஆனால் கைவிடமாட்டான். தமிழகத்தை ஆளலாம் என சிலர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்; அது ஒருபோதும் பலிக்காது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு என்றும் இருக்கும்’ என்று பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP