பாலால் மக்கள் வயிற்றில் அடித்துள்ளது அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக மட்டுமல்ல, தேசிய அளவிலான பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

நெல்லை பாளையங்கோட்டையில் ஒண்டி வீரன் சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக ஆட்சியில் 3 முறை பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.  

மேலும், வயிற்றில் பால் வார்ப்பது என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அதிமுக அரசு பாலால் மக்கள் வயிற்றில் அடித்துள்ளதாக விமர்சித்தார். திமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக மட்டுமல்ல, தேசிய அளவிலான  பிரச்சனைக்கும் குரல் கொடுப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP