திருச்சியில் மறுதேர்தல் : அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா மனு

திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள மூன்று வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தேர்தல் அதிகாரியிடம் இன்று மனு அளித்துள்ளார்.
 | 

திருச்சியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று காலை தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பதிவான வாக்குபெட்டிகள் அனைத்தும், திருச்சி சாரநாதன் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று வாக்குபதிவின் போது, திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், புதுக்கோட்டையில் ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்கு பதிவு இயந்திரங்களை இடம் மாற்றி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட மூன்று வாக்குச்சாவடிகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என, திருச்சி மக்களவை தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சிவராசுவை சந்தித்து இன்று மனு அளித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP