தமிழ் மாநில காங்கிரஸையும் கூட்டணிக்குள் இழுத்த அதிமுக!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், த.ம.கா, கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், அக்கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மாபெரும் கூட்டணியை உருவாக்கி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா, மற்றும் தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். பாஜகவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன நிலையில், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைய உள்ளதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை கட்சித் தலைவர் ஜிகே வாசன் மறுத்திருந்தார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP