அமைச்சர் வேலுமணி மீது ஊழல் நெருப்பு மூட்டிய அதிமுக நிர்வாகி... ‘உள்ளாட்சி’க்குள் புகையும் பகை!

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது ஆத்திரத்தில் இருக்கும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான கே.பி.முனுசாமியே, அத்துறை குறித்த ஊழல் தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 | 

அமைச்சர் வேலுமணி மீது ஊழல் நெருப்பு மூட்டிய அதிமுக நிர்வாகி... ‘உள்ளாட்சி’க்குள் புகையும் பகை!

அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிப்படையாகக் கூறியிருந்தார் அ.தி.மு.க. எம்.பி-யான மைத்ரேயன். அவர், சொல்லிச் சரியாக ஓராண்டு காலம் கடந்த பிறகும் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணி ஆதரவாளர்களுக்கு இடையேயான அக்கப்போர்கள் வலுவாக மூண்டு வருகின்றன. 

ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து சரியாக பதினைந்து மாதங்களாகிறது. இரு அணிகளும் இணைந்தால் கட்சியிலும் ஆட்சியிலும் சமமாக அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்பட்டு ஈ.பி.எஸ் கை ஓங்கி வருகிறது. ஆனால், ஓ.பி.எஸ் தன்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் தனது ஆதரவாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார். 

 அமைச்சர் வேலுமணி மீது ஊழல் நெருப்பு மூட்டிய அதிமுக நிர்வாகி... ‘உள்ளாட்சி’க்குள் புகையும் பகை!

இதனால், இனி ஓ.பி.எஸை நம்பி பலனில்லை என உணர்ந்து கொண்ட சிலர் ஈ.பி.எஸிடம் சரணடைந்து விட்டனர். மீதமுள்ள சில ஆதரவாளர்கள் எடப்பாடி தரப்பினரிடம் நேரடியாக முட்டி மோதி வருகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார்- மதுசூதனன் மோதலைத் தொடர்ந்து இப்போது ஓ.பி.எஸ் ஆதரவாளரான முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமிக்கும், எடப்பாடி தரப்பினரும், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான வேலுமணிக்கும் இடையே மோதல் படலம் அரங்கேறி வருகிறது.

 அமைச்சர் வேலுமணி மீது ஊழல் நெருப்பு மூட்டிய அதிமுக நிர்வாகி... ‘உள்ளாட்சி’க்குள் புகையும் பகை!

வேலுமணியை பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் அதிகமாகவே புகார்களை கொட்டித்தீர்த்து வருகிறார் கே.பி.முனுசாமி. ’’கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் கையிருப்புப் பணம் கோடிக்கணக்கில் இருந்தது. இந்த ஆட்சியில் எல்லாம் கடனாகத்தான் இருந்து வருகிறது. எல்லாவற்றிலும் ஊழல், ஊழல் என்று இருப்பதே இதற்குக் காரணம். 2011-2016 அதிமுக ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது நான் உள்ளாட்சித் துறைக்கு அமைச்சராக இருந்தேன். அப்போது மாநகராட்சிகளில் பல நூறு கோடி ரூபாய் கையிருப்பு இருந்தது. அப்போது எந்த ஊழலும் அந்தத் துறையில் நடக்கல. அதை என்னால் அடித்து சொல்ல முடியும். இப்போது ஊழல் இல்லைன்னு வேலுமணியால சொல்ல முடியுமா? 

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி வெற்றிபெற்றார். அந்தக் கோபத்தில் என்கிட்ட இருந்த உள்ளாட்சித் துறையை பிடுங்கி வேலுமணி கிட்ட கொடுத்துட்டாங்க அம்மா. அப்போதிலிருந்தே அது உள்ளாட்சித் துறையாக இல்லை. ஊழல் துறையாகத்தான் இருக்கு. அதுதான் இப்போது தி.மு.க-காரர்கள் அவர் மேல வழக்கு போடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. வேலுமணிகிட்ட நான் பல முறை எடுத்துச் சொல்லிட்டேன். அவர் கேட்கல’’ எனப்புலம்பி வருகிறார் முனுசாமி. 

அமைச்சர் வேலுமணி மீது ஊழல் நெருப்பு மூட்டிய அதிமுக நிர்வாகி... ‘உள்ளாட்சி’க்குள் புகையும் பகை!

இந்தப்புலம்பல்கள் வேலுமணியின் கவனத்திற்கும் வந்திருக்கிறது. கொதித்துப்போன அவர், இந்த விவகாரத்தை முதல்வர் எடப்பாடியிடமும் கொண்டு சென்றிருக்கிறார் ‘இப்படியே ஒவ்வொரு துறையின் முன்னாள் அமைச்சர்களும் ஆரம்பிச்சாங்கன்னா நாம ஆட்சி நடத்தவே முடியாது. முனுசாமியை கூப்பிட்டு நீங்க பேசணும். அவரைக் கண்டிக்கணும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதையடுத்து வேலுமணியை சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறாராம் முதல்வர். 

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது ஆத்திரத்தில் இருக்கும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான கே.பி.முனுசாமியே அந்தத்துறை சார்ந்த ஊழல் தொடர்பான தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 
 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP