நடிகை நிலானியின் காதலன் தற்கொலை...பின்னணியில் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி..?

சின்னதிரை நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் லலித் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரும் காரணம் எனக்கூறப்படுகிறது.
 | 

நடிகை நிலானியின் காதலன் தற்கொலை...பின்னணியில் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி..?

சின்னதிரை நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் லலித் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரும் காரணம் எனக்கூறப்படுகிறது. 

காந்தி லலித் குமாருக்கு தன்னை விட ஆறு வயது மூத்தவரும், கணவரைப் பிரிந்து வாழ்ந்தவருமான நிலானி மீது காதல். ஆரம்பத்தில் உல்லாசமாக இருந்துவிட்டு லலித் குமாரின் செயல்பாடுகள் பிடிக்காததால் திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறுகிறார் நிலானி. இதனால் மனமுடைந்த காந்தி லலித் குமார் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார். காந்தி லலித் குமாரை பிரிந்ததற்கு பல்வேறு காரணங்களைக் கூறி வருகிறார் நிலானி. 

நடிகை நிலானியின் காதலன் தற்கொலை...பின்னணியில் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி..?

இருப்பினும் காந்தி லலித் குமார் உறவினர்கள் யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை என்பதும், நிலானியிடம் போலீசார் விசாரணை மட்டுமே செய்து விட்டுத் திருப்பி அனுப்பி விட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. இதன் பின்னால் அரசியல் பின்னணி இருக்கலாம் எனக்கருதப்படும் நிலையில், சில தகவல்கள் வெளியாகி உள்ளன. திருவண்ணாமலையை சேர்ந்தவர் காந்தி லலித்குமார். சினிமா ஆசையில் சென்னை வந்தவர் சில வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏவும், நடிகர் உதயநிதிஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், உதயநிதி நற்பணி மன்ற நிர்வாகியுமான மகேஷ்பொய்யாமொழியின் நட்பு வட்டத்தில் இணைந்துள்ளார் காந்தி லலித் குமார். பின்னர், திருவண்ணாமலை மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார். 

நடிகை நிலானியின் காதலன் தற்கொலை...பின்னணியில் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி..?

சொந்தவூர் திருவண்ணாமலையாக இருந்தாலும் சென்னையிலேயே இருந்தார். சின்னத்துறை நடிகையான நிலானி சந்தித்து காதலைக் கூறியுள்ளார். இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்துள்ளனர். காதல் முறிந்தாலும் அவ்வப்போது நட்பாக இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு காந்தி லலித் குமார் நண்பரும், திருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்டு சென்னையில் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் வினோத், நிலானியிடம் தவறாக பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வினோத் குமார் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நெருங்கிய நண்பர். உதயநிதி ரசிகர் மன்றத்தில் முக்கியப் பொறுப்பிலும் இருந்து வருகிறார். அப்படிப்பட்டவர்தான் நிலானியிடம் தவறாகப் பேசியதாக கூறுகிறார்கள். 

அதன் பிறகே நிலானி- காந்தி லலித் குமார் இடையிலான காதல் கசப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. ’உன் நண்பனே இப்படின்னா, நீயும் அவனை மாதிரிதானே இருப்ப’ எனக் கூறிய நிலானி காந்தி லலித் குமாரின் சந்திப்பை தவிர்த்து இருக்கிறார் என்கிறார்கள். இதனால் கோபமான காந்தி, நண்பன் விநோத்தின் நடத்தைக் குறித்த ஆடியோக்களை அப்போதே வெளியிட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு காந்தியும், விநோத்தும் சமரசமானதாகக் கூறப்படுகிறது. 

நடிகை நிலானியின் காதலன் தற்கொலை...பின்னணியில் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி..?

                                                                                            உதயநிதியுடன் வினோத்

காந்தி லலித் குமார் உறவினர்கள் சிலர், ‘’தைரியமான அவன் தற்கொலை செய்துக்கொள்ளும் அளவுக்குக் கோழையல்ல. நிலாணி தொடர்பாக ஏதாவது எதிர்கொள்ள முடியாத அளவுக்கு மிரட்டல் வந்து இருக்க வேண்டும். அல்லது பழைய பிரச்சனையால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் யாராவது அவரை மிரட்டியிருக்க வேண்டும்’’ என்கிறார்கள். இந்த தற்கொலை உதயநிதி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விஸ்வரூபம் எடுப்பதற்கு காந்தியின் நண்பர்கள் சிலர்தான் காரணம். அவர்கள்தான் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP