முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் இருந்தார்.
 | 

முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ராதாரவி அதிமுகவில் இணைந்த போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் இருந்தார். 

நயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர்காலம்' பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திரை பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்களை இழிவாக பேசும் ராதாரவி மீது கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா கடிதம் எழுதினார். அதன்படி, ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, நடிகர் ராதாரவி இன்று இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திமுகவில் இணைவதற்கு முன்னதாக அவர் அதிமுகவில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP