தானே தணியும் அபஸ்சுவரங்கள்!

இந்த முறை சென்னைக்கு மோடி வந்த போது கூட கோ பேக் மோடி பரவ விட்டனர். ஆனால் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கு மக்கள் விழிப்புணர்வு பெற்றது தான் முதன்மைக் காரணம்.
 | 

தானே தணியும் அபஸ்சுவரங்கள்!

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, அவரைப்பற்றி  தமிழகம் அறியாத காலத்தில், துக்ளக் ஆசிரியர் சோ தான் அவரை இங்கு இழுந்து வந்து அறிமுகம் செய்தார். துக்ளக் வார இதழில் குஜராத் வளர்ச்சி பற்றி தொடர் கட்டுரைகளை வெளியிட்டு, அறிவார்ந்த மக்களிடம் மோடியை அறிமுகம் செய்தார். அவர் தான் மோடி பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று பாஜகவில் விதை விதைத்தவர்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஆண்ட, ஆளும் கட்சிகள் மக்களை ஏமாற்றும் நாடகங்கள் மட்டுமே அரசியல் என்று அடையாளம் காட்டிக் கொண்டிருந்தன. தங்கள் ஆட்சியில் ஒரு திட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு, ஆட்சியில் இல்லாத போது போராட்டங்கள் நடத்தின. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் என்று அவர்கள் அறிமுகம் செய்த அனைத்துமே, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

தானே தணியும் அபஸ்சுவரங்கள்!

ஆனால், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி அவ்வாறு இல்லாமல் உண்மையான வளர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்டிருந்தது. இதனால் அதிரச்சியடைந்த தமிழக கட்சிகள் மோடி எதிர்ப்பு என்ற எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துக் கொண்டார்கள். தமிழகத்தின் ஆதரவு கிடைக்காவிட்டால் கூட மத்தியில் மோடி ஆட்சியை பிடித்ததும், அவர் எதை செய்தாலும் எதிர்ப்பது என்ற ஒற்றை குறிக்கோளில் மட்டுமே கட்சியை நடத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த, அந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய அரசியல்வாதிகள் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள், மோடி தான் இதற்கு காரணம் என்பது போல பேசினார். இவர்கள் எதிர்க்கும் கார்ப்ரேட் நிறுவனமான ஜியோ இலவசமாக இணைய இணைப்புகள் வழங்கியதும், இவர்கள் போராட்டம் சூடுபிடித்தது. 

கோ பேக் மோடி என்று சமூக வலைதளங்களில்  கூவினார்கள். களத்தில் பிரியாணி, 200 ரூபாய், கட்சி வேட்டி சேலை என்று ஆள் பிடிப்பதைக் காட்டிலும் இது செலவு குறைவு என்பதால் சமூக ஊடகங்களில் இவர்கள் ஆட்டம் தாங்க முடியாத அளவிற்கு சென்றது.

அதே நேரத்தில், வட மாநிலங்களில் மட்டுமே புகழ் பெற்ற மோடி துல்லிய தாக்குதல், ஊழல்வாதிகளை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்தது போன்ற பல விதமான நடவடிக்கைகளில் தான் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு புகழ் பெற்றார். இதையடுத்து சமூக ஊடகப் போராளிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் புகழை இழந்தார்கள்.

தமிழகத்தில் கோ பேக் மோடி என்று கத்திய கட்சிகளின் எம்பிக்கள் மோடி அரசில் ஒவ்வொரு குழுவிலும் தாங்கள் இடம் பிடித்துக் கொண்டது, நடுநிலையாளர்களுக்கும் அந்த கட்சிகளின் மீது மரியாதை இழப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் கோ பேக் மோடிக்கு எதிராக கம்பேக் மோடி என்ற ஹஷ்டேக் பரலாக தொடங்கியது. இதனால் களத்திலும் கோ பேக் மோடி பிரச்சரத்திற்கு எதிர்ப்பு, ஆன்லைனிலும் அதற்கு எதிர்ப்பு என்று இரு பக்கமும் கோ பேக் மோடி சிக்கி கொண்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் - எதிர்க்கட்சி தலைவரின் சந்திப்பு; அவரின் போர் குணத்தை மழுங்க செய்து விட்டது. அவர் களத்தில் அறிவித்த போராட்டத்தையே ஒத்தி வைத்தார் என்றால் ஆன்லைன் போராட்டத்திற்கு மட்டுமே ஆதரவு தருவார்? அவரின் ஆதரவு அறுந்து போனபின்னர் கோபேக் மோடி கத்தலின் சத்தம் குறைந்துவிட்டது. ஆனாலும் முழுமையாக நின்று விடாமல் அபசுவரமாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது

இன்னொரு புறம் மோடி தமிழ் மீது காட்டும் பரிவு, மரியாதை போன்றவை .மொழி மீது விருப்பம் கொண்டவர்களை மனம் மாற்றம் அடையச் செய்தது. இதனால் வெளியே தெரியாமல் மோடி ஆதரவு பெருகிக் கொண்டு தான் இருக்கிறது. மோடி தமிழ், தமிழ் கலாச்சாரத்தின் மீது எவ்வளவு பற்றி கொண்டவர் என்பதை உணர்து கொண்டுதான் சென்னை ஐஐடி மாணவர்கள் வேட்டி சட்டையில் வந்து பரிசு, பட்டம் ஆகியவற்றை வாங்கினா்ர்கள். உண்மையான மொழி, கலச்சார பற்றுகொண்டவரை அறிந்த தமிழக மக்கள் அவரை வரவேற்க தொடங்கி விட்டார்கள்.

இந்த முறை சென்னைக்கு மோடி வந்த போது கூட  கோ பேக் மோடி பரவ விட்டனர். ஆனால் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கு மக்கள் விழிப்புணர்வு பெற்றது தான் முதன்மைக் காரணம். கடந்த காலங்களில் ராகமாக ஒளித்த கோ பேக் மோடி, தற்போது அபஸ்வரமாக மாறிவிட்டது. அபஸ்வரங்களை யாரும் அன்றாடம் கேட்க மாட்டார்கள். அதனை அப்புறப்படுத்தவே நினைப்பார்கள்.

அதற்கு முன்பாகவே கோ பேக் மோடி என்று அபஸ்வரம் வாசிப்பவர்கள் அதை நிறுவத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் வெளியேற்றி விடுவார்கள்.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP