4 தொகுதி இடைத்தேர்தல்: 152 வேட்புமனுக்கள் ஏற்பு

சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 152 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 | 

4 தொகுதி இடைத்தேர்தல்: 152 வேட்புமனுக்கள் ஏற்பு

சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு 152 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "  நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டமொத்த வேட்புமனுக்களில் 152 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சூலூர் - 22, அரவக்குறிச்சி - 68, ஒட்டப்பிடாரம் - 18, திருப்பரங்குன்றம் - 44 வேட்புமனுக்கள் அடங்கும். 104 வேட்புமனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளன" என்றார் அவர்.

மேலும், நாளை மறுநாள் (மே 2) பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 4 சட்டப்பேரவை தொகுதிக்கு மே 19 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP