ரூ.2400 கோடி லஞ்சம்... தமிழக அமைச்சரின் முட்டைகளை உடைத்த உறவினர்!

சத்துணவில் நடந்திருக்கும் ரூ.2400 கோடி ஊழல் குறித்து அமைச்சர் சரோஜாவின் உறவினர்தான் அத்தனை ஆதாரங்களையும் கையில் எடுத்து, வெளியிட்டு வருகிறார்.
 | 

ரூ.2400 கோடி லஞ்சம்... தமிழக அமைச்சரின் முட்டைகளை உடைத்த உறவினர்!

சத்துணவுத் திட்டத்தில் ரூ. 2400 கோடி லஞ்சம் வாங்கிய விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. முட்டை கொள்முதல், சத்துணவுக்கு பொருட்கள் வாங்கியது என ஒவ்வொன்றிலும் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது என்பதை விசாரிக்க முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த ஊழலில் அமைச்சர் சரோஜாவின் தலைதான் உருள ஆரம்பித்திருக்கிறது. அமைச்சர் சரோஜாவுக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் ராசிபுரத்தில் இருக்கிறாராம். ஆரம்பத்தில் சரோஜாவுடன் நெருக்கமாக இருந்த அவர், தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட சில மன வருத்தங்களால் அவரோடு பேசுவது இல்லையாம். சத்துணவில் நடந்திருக்கும் ஊழல் குறித்து அவர்தான் அத்தனை ஆதாரங்களையும் கையில் எடுத்து, வெளியிட்டு வருகிறாராம். சட்டப் பஞ்சாயத்து, அறப்போர் இயக்கம் என ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகளிடம் அந்த ஆதாரங்களைக் கொடுத்திருப்பதும் அந்த உறவினர்தானாம். சரோஜா எவ்வளவோ பேசியும் அந்த உறவினர் சமாதானம் ஆகவே இல்லையாம்.
இன்னும்கூட, சரோஜா துறையில் நடந்திருக்கும் ஊழல் ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் வெளியாகும் என்கிறார்கள் சரோஜா குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள்.தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில்தான் 90 சதவீத முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாள் ஒன்றிற்கு ஏறக்குறைய 3 ¼ கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

ரூ.2400 கோடி லஞ்சம்... தமிழக அமைச்சரின் முட்டைகளை உடைத்த உறவினர்!

அதில், பொதுமக்களுக்கு 1 ½ கோடி முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 70 லட்சம் முட்டைகள் ஏழை எளிய குழந்தைகள் சாப்பிடும் சத்துணவுக்கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள, 1 ½ கோடி முட்டைகள் அண்டை மாநிலங்களுக்கு குறிப்பாக கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. ஏறத்தாழ, 25 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்திடமிருந்து ஒரு நாளைக்கு 70 லட்சம் முட்டைகள் பள்ளிகள், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வாங்கியதில்தான் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்தது என்பது குறித்து விசாரிக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது டெல்லியிலுள்ள (Competition Commission of India) ஆணையம்.

ரூ.2400 கோடி லஞ்சம்... தமிழக அமைச்சரின் முட்டைகளை உடைத்த உறவினர்!

இந்தியாவில் விற்கப்படும் முட்டைகளின் விலையை நிர்ணயிப்பது என்.இ.சி.சி. (National Egg Coordination Committee) எனப்படும் முட்டை ஒருங்கிணைப்புக் குழு. 'நேஷனல்' என்று இருப்பதால் மத்திய அரசின் அமைப்பு என்று பலரும் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், கோழிப்பண்ணையாளர்களால் சொசைட்டி ஆக்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் அறக்கட்டளைதான் இந்த என்.இ.சி.சி.
வெளிநாடுகளுக்கு அனுப்படும் முட்டைகள் 65 கிராம் எடை கொண்டவை. அதைவிட, எடை குறைவானது பொதுமக்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் விற்கப்படும் 55 கிராம் எடைகொண்ட முட்டை. ஆனால், இந்த இரண்டுவித முட்டைகளின் எடையையும்விட மிக மிக குறைந்த எடைகொண்டதுதான் சத்துணவுக்கூடங்களுக்கு அனுப்பப்படும் சிறிய சைஸ் முட்டைகள் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 46 கிராம் எடை கொண்டவை.

ரூ.2400 கோடி லஞ்சம்... தமிழக அமைச்சரின் முட்டைகளை உடைத்த உறவினர்!

ஆனால், அனைத்துவிதமான முட்டைகளுக்கும் ஒரே விலையை நிர்ணயித்திருக்கிறது என்.இ.சி.சி. எனப்படும் நேஷனல் எக் கோ-ஆர்டினேஷன் கமிட்டி. இதில்தான், ஊழல் செய்தது கிறிஸ்டி ஃபுட் நிறுவனம். அமைச்சர் சரோஜாவுக்கும் கமிஷன் கைமாறி இருக்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP