வாக்குப்பதிவு இயந்திர அறைகளுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பக்கம் யாரும் நுழையாத வகையில் தடுப்பு போட வேண்டுமென்று, வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
 | 

மேலும், 'முக்கிய பிரமுகர் யாரேனும் வர நேர்ந்தால் பதிவு புத்தகத்தில் அவர்களின் கையெழுத்தை பெற வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையில்லா மின்சாரம், ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்' என்றும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP