22 எம்.எல்.ஏக்கள் பெயர்கள் அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளின் உறுப்பினர்கள் பெயர்கள் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
 | 

22 எம்.எல்.ஏக்கள் பெயர்கள் அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளின் உறுப்பினர்கள் பெயர்கள் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலோடு, தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில், திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும்  நாளை சபாநாயகர் அறையில் பதவியேற்கின்றனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் நாளை மறுநாள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில், இடைத்தேர்தலில்  வெற்றிபெற்ற 22 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவின் வெங்கடேசன் 29-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏவாக பதவியேற்கிறார். அவருக்கு சபாநாயகர் சிவகொழுந்து பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP