பந்தாடப்பட்ட 20 ஏ.பி.ஆர்.ஓ-க்கள்... எடப்பாடி மீது குமுறல்!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஏ.பி.ஆர்.ஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் எடப்பாடி மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
 | 

பந்தாடப்பட்ட 20 ஏ.பி.ஆர்.ஓ-க்கள்... எடப்பாடி மீது குமுறல்!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஏ.பி.ஆர்.ஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அரசின் செயல்படுத்தும் திட்டங்கள், சலுகைகள், சாதனைகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக செய்தி மக்கள் தொடர்பு துறை இயங்கி வருகிறது. இத்துறையில் பணியமர்த்தப்படும் ஏ.பி.ஆர்.ஓக்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சி விசுவாசிகளாகவே இருப்பர். அரசு துறைகளில் தகவல்களை சேகரித்து நாளிதழ்களுக்கு செய்தி கொடுக்கும் பணியை உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (தகவல்), அரசின் சாதனைகளை கிராமங்களில் வீடியோ படக்காட்சி மூலம் பிரசாரம் செய்யும் பணியை இந்த ஏ.பி.ஆர்.ஓக்கள் செய்து வருகின்றனர்.  இந்தப் பதவியில் கடந்த 25 ஆண்டுகளாக ஆளுங்கட்சியினரே நியமிக்கப்படுகின்றனர். 

பந்தாடப்பட்ட 20 ஏ.பி.ஆர்.ஓ-க்கள்... எடப்பாடி மீது குமுறல்!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவ்வப்போது செய்தி மக்கள் தொடர்பு துறையில், பி.ஆர்.ஓ-க்களை ஒரே நேரத்தில் கூண்டோடு இடம் மாற்றம் செய்வது வழக்கம். காரணம், அதில், நிர்வாக காரணங்களும் இருக்கும். அரசியல் காரணங்களும் இருக்கும். ஆனாலும், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள ஏ.பி.ஆர்.ஓ.,க்களை பெரும்பாலும்  ஜெயலலிதா கண்டுகொள்ள மாட்டார். ஆனால் சமீபத்தில், தமிழகம் முழுவதும், மொத்தமாக 20 ஏ.பி.ஆர்.ஓ.,க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த பட்டியலில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர்களும் அடக்கம். இதுவரை இல்லாத வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கிறனர் ஏ.பி.ஆர்.ஓக்கள். ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில் இந்த இடமாற்றம் தேவையா என அவர்கள் குமுறுகின்றனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP