சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம்

சட்டவிரோத பணம் பதுக்கப்பட்ட விவகாரத்தில் சேகர் ரெட்டி மீதான 3 வழக்குகளை 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம்

சட்டவிரோத பணம் பதுக்கப்பட்ட விவகாரத்தில் சேகர் ரெட்டி உள்பட 5 பேர் மீதான 3 வழக்குகளில் 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்ததாக வந்த தகவலை அடுத்து, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் இல்லம்  மற்றும் அவரது அலுவலகங்களில் சிபிஐ மற்றும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இதில் ரூ.34 கோடி வரையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள், ரூ.147 கோடி அளவில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் 178 கிலோ தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தது. இதில் ரூ.34 கோடி கைப்பற்றபட்ட விவகாரத்தில், சேகர் ரெட்டி உள்பட 5 பேர்  மீது, சிபிஐ 3 வழக்குகளை பதிவு செய்தது. 

இதையடுத்து, சேகர் ரெட்டி சென்னை உயர்நீதிமதின்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், "ஒரே குற்றச்செயலுக்கு 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. எனவே 2வது, 3வது வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவின் விசாரணையில், சேகர் ரெட்டி உள்பட 5 பேர் மீது சிபிஐ பதிவு செய்த 3 வழக்குகளில் 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், முதல் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP