போலீஸ் தேர்விலும் மோசடி! 1,000 பேர் பணி நியமனம் நிறுத்தி வைப்பு!!

போலீஸ் தேர்விலும் மோசடி! 1,000 பேர் பணி நியமனம் நிறுத்தி வைப்பு!!
 | 

போலீஸ் தேர்விலும் மோசடி! 1,000 பேர் பணி நியமனம் நிறுத்தி வைப்பு!!

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. பணியாளர் தேர்வில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நடைப்பெற்ற போலீஸ் பணியாளர் தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து பலர் வேலையில் சேர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் தேர்விலும் மோசடி! 1,000 பேர் பணி நியமனம் நிறுத்தி வைப்பு!!

தமிழக போலீஸ் துறை, தீயணைப்பு துறை, ஜெயில் துறை ஆகியவற்றுக்கான காவலர்களை தேர்வு செய்ய தனியாக சீருடை பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது.இந்த 3 துறைகளிலும் போலீஸ் கான்ஸ்டபிள், தீயணைப்பு வீரர்கள், ஜெயில் வார்டன்கள் பிரிவில் 8 ஆயிரத்து 888 பணியிடங்கள் காலியாக இருந்தன. 

போலீஸ் தேர்விலும் மோசடி! 1,000 பேர் பணி நியமனம் நிறுத்தி வைப்பு!!

இந்த 8,888 காலி பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு நடைப்பெற்ற தேர்வில் 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டார்கள். இதில், 47 ஆயிரம் பேர் வெற்றி பெற்றார்கள். அதன்பிறகு இறுதியாக 8 ஆயிரத்து 800 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த 3 பணிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கென 10 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி அவர்கள் முக்கிய விளையாட்டுகளில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆனால், ஏராளமானோர் தகுதியற்ற சான்றிதழ்களை வழங்கி உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

போலீஸ் தேர்விலும் மோசடி! 1,000 பேர் பணி நியமனம் நிறுத்தி வைப்பு!!

விளையாட்டு இடஒதுக்கீட்டில் தேர்வு பெற்று இருந்த அனைவருடைய விளையாட்டு சான்றிதழ்களும் சரிபார்ப்பு பணிக்காக தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் 1,000 சான்றிதழ்களுக்கு மேல் தகுதியற்றது என்று கூறி உள்ளனர். ஏராளமானோர் போலியாகவும் சங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP