பிரதமர் மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் அல்ல: எஸ்.வி.சேகர்

தமிழ்நாட்டில் பிரதமர் மோடியை பற்றி பேசுவது அனைத்தும் கற்பனை கதைகள் என்றும் மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் கிடையாது எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமர் மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் அல்ல: எஸ்.வி.சேகர்

பிரதமர் மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் கிடையாது என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா திருச்சி தனியார் கல்லூரி அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் தலைமை தாங்கினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். 

பிரதமர் மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் அல்ல: எஸ்.வி.சேகர்

விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது:- பொருளாதார அடிப்படையில் தான் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். அவரது ஆசையை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி இருக்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் திருடர்கள், கடத்தல்காரர்களுக்கு தான் பாதிப்பு. திருடர்களுக்கு போலீசை கண்டால் பிடிக்காது. அதனால் தான் எதிர்க்கட்சிகளுக்கு மோடியை பிடிக்கவில்லை. 

தமிழ்நாட்டில் மோடியை பற்றி பேசுவது அனைத்தும் கற்பனை கதைகள். மோடி, ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் கிடையாது. தேர்தலில் பிரதமர் மோடி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார். இந்து மதத்தை கேவலப்படுத்தக்கூடிய எந்த செயலையும் மற்ற மதத்தினர் ரசிப்பது இல்லை என்பதுதான் உண்மை.

இந்துக்கள் பொறுமைசாலிகள். ஆனால் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதை 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துகொள்வார்கள். கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. நான்கூட முன்பு கமல்ஹாசன் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று தவிர்க்க முடியாத இடத்துக்கு வருவார் என்று கூறி இருந்தேன். ஆனால், அவர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கமல்ஹாசனின் கட்சியே இல்லாமல் போய்விடும் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP