மகளை கொலை செய்ய அனுமதி வேண்டும்! கலங்கி நின்ற பெற்றோர்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கொட்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா (68) இவருக்கு சுப்புலட்சுமி (35) என்ற மகள் உள்ளார். சுப்புலட்சுமி கடந்த 25 ஆண்டுகளாகத் தாடை விலங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 | 

மகளை கொலை செய்ய அனுமதி வேண்டும்! கலங்கி நின்ற பெற்றோர்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கொட்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா (68) இவருக்கு சுப்புலட்சுமி (35) என்ற மகள் உள்ளார். சுப்புலட்சுமி கடந்த 25 ஆண்டுகளாகத் தாடை விலங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தனை ஆண்டுகாலமாக பெற்றோர் பராமரித்து வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாகவும், கூலி வேலைக்கு செல்ல முடியாததாலும் அவரை பராமரிக்க முடியாத நிலையில் தற்போது உள்ளதாக முருகையை வேதனையுடன் கூறுகிறார். 

மகளை கொலை செய்ய அனுமதி வேண்டும்! கலங்கி நின்ற பெற்றோர்!

இந்நிலையில் மகள் சுப்புலஷ்மியை தொடர்ந்து பராமரிக்க முடியாததால் அவரை கருணை கொலை செய்யவேண்டும் என்று அவரது தந்தை முருகையா ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.  கடந்த 2016 ஆம் ஆண்டே மகளை கருணை கொலை செய்ய வேண்டும் என்று கூறி நெல்லை ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு உதவியும் கிடைக்கவில்லை. தற்போது தென்காசி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP