மக்களே உஷார்!! உயிரைப் பறித்த ஃபேஸ்புக்!!

மக்களே உஷார்!! உயிரைப் பறித்த ஃபேஸ்புக்!!
 | 

மக்களே உஷார்!! உயிரைப் பறித்த ஃபேஸ்புக்!!

உடம்புக்கு சரியில்லை என்றால் மருத்துவரிடம் சென்று காட்டுவதற்கு இன்னமும் நம் மக்களிடையே அச்சமும், சோர்வும் இருக்கச் செய்கிறது. அதன் விளைவாக தான் ஜலதோஷமா, மூக்கடைப்பா, தும்மலா என்று எதற்கெடுத்தாலும் பக்கத்து வீடுகளில் ஆரம்பித்து அடுத்த தெரு வரையில் கூகுள் டாக்டர்கள் இருக்கிறார்கள். 

மக்களே உஷார்!! உயிரைப் பறித்த ஃபேஸ்புக்!!

சமீப காலங்களாக வாட்ஸ் அப் செயலியில் வருகிற பார்வேர்ட் மெஸேஜ்களை அப்படியே எடுத்து ஃபைல் பண்ணி வைக்கும் போக்கும் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. உண்மைத் தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யுங்க... இந்தியனா இருந்தா இதை ஷேர் செய்யுங்க... நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில் இல்லை என்கிற ரீதியில் உயிருக்கே உலை வைக்கும் ஆர்வ கோளாறு செய்திகள், ஹெல்த் டிப்ஸ் என்கிறப் பெயரில் யூ ட்யூப்களிலும், வாட்ஸ் அப்களிலும், முக நூலிலும் கொட்டிக் கிடைக்கிறது.

மக்களே உஷார்!! உயிரைப் பறித்த ஃபேஸ்புக்!!

இப்படி சமூக வலைதளங்கள் எந்தளவுக்கு நன்மைகளைத் தருகிறதோ அதைவிட அதிகமாக வதந்திகளையும் பரப்பி விடுகிறது. அப்படி வந்த ஒரு முகநூல் செய்தி, இளைஞரின் உயிரையே பறித்திருக்கிறது.

இலங்கையின் கம்பஹாவைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த ஜூஸை குடித்தால் போதும் என ஃபேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து விட்டு, உற்சாகமாக அந்த வீடியோவில் கூறியிருப்பதைப் போலவே கஜ மாடரா என்ற மரத்தின் இலைகளை பறித்து அதனை பழச்சாறாக போட்டு குடித்திருக்கிறார். அந்த ஜூஸை குடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்கி கீழே சரிந்து விழுந்திருக்கிறார்.

மக்களே உஷார்!! உயிரைப் பறித்த ஃபேஸ்புக்!!

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை நடத்திய போது அவர் குடித்த பழச்சாற்றில் விஷம் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை மரங்கள் இலங்கையில் மிகவும் அரிதாகவே இருக்கும் என்றும், இந்த கஜ மாடரா மரத்தை பாம்பு, பூச்சிகள் கூட அண்டாது என்றும் தெரிவிக்கின்றனர்.

ஃபேஸ்புக், யூ ட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் வரும் அனைத்தும் உண்மையானதா, இல்லையா என்பதனை சரிப்பார்த்தே பயன்படுத்துங்கள். சிலர் லைக்ஸ்களுக்காகவும், வியூஸ்களுக்காகவும் கண்டதையும் ஆராயாமல் பதிவேற்றுகிறார்கள். சில பதிவுகள் உங்கள் உயிரையே பதம் பார்த்து விடக் கூடும். அதனால் உஷார் மக்களே!!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP