1. Home
  2. தமிழ்நாடு

1,100 ஏக்கரில், ஆசியாவிலேயே பெரிய பூங்கா! அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

1,100 ஏக்கரில், ஆசியாவிலேயே பெரிய பூங்கா! அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

ஆசியாவிலேயே பெரியதாக, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,100 ஏக்கரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவில் மருத்துவக் கல்லூரி கட்டவும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சி தொடர விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அ.தி.மு.க. அரசு, இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன், நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் வண்ணம், ‘‘அசீல்’’ இனக் கோழிகளை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்நோக்கு பூங்காவாக இருக்கும்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர். 3 பிரிவுகளாக அமையவுள்ள பூங்காவின் முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை அமைகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like