நெல்லை செவிலியர் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி

நெல்லை செவிலியர் பாலியல் பலாத்கார வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி
 | 

நெல்லை செவிலியர் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே செவிலியர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்து வந்தார். செவிலியரின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால், அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு வீட்டில் செவிலியர் தனியாக தூங்கிக் கொண்டு இருந்தார். அன்று இரவு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் மாடியில் இருந்து வீட்டிற்குள் புகுந்தது. வீட்டில் இருந்த செவிலியரை வாயில் துணியை பொத்தி சிலர் கற்பழித்தனர். பின்னர் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொடூரமாக கொலை செய்தனர். நெல்லை செவிலியர் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை.. நீதிமன்றம் அதிரடிமேலும் வீட்டில் இருந்த 25 கிராம் தங்க நகைகளையும் கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பான புகாரில் கல்லிடைக்குறிச்சிச் சேர்ந்த கார்த்திக் (21), மகேந்திரன் (24), வசந்தகுமார் (30), ராஜேஷ் (27), கணேசன் (51), சின்னத்துரை (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் செவிலியரை நகைக்காக கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.

நெல்லை செவிலியர் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட 6 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட வசந்தகுமார், ராஜேஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு கூறினார்.

நெல்லை செவிலியர் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி

அதாவது அரசு ஊழியரான செவிலியர் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கு ஆயுள் தண்டனையும், கற்பழித்து கொலை செய்ததற்காக தூக்கு தண்டனையும், 376 சட்டப்பிரிவின் படி 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP