டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில்,சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களுக்கும்,  சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இந்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 செய்தியாளர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வன்முறை பகுதிகளான மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் தவிர சாந்த் பாக், பஜன்பூரா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையாளர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP