ஒரே ஒரு வாட்ஸ்அப் குழு தான்.. பல லட்சம் ரூபாய் மோசடி செய்த புரோகிதர்..!

ஒரே ஒரு வாட்ஸ்அப் குரூப் தான்.. பல லட்சம் ரூபாய் மோசடி செய்த புரோகிதர்..!
 | 

ஒரே ஒரு வாட்ஸ்அப் குழு தான்.. பல லட்சம் ரூபாய் மோசடி செய்த புரோகிதர்..!

கோயில்களில் அர்ச்சனை செய்வது எப்படி.. பயிற்சி அளிப்பதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். 

சேலம் காடையாம்பட்டியில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் புரோகிதர் பணி செய்து வந்தார். அவர் வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கி அர்ச்சனை செய்வது குறித்து வகுப்பு எடுப்பதோடு பயிற்சி அளித்து அதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என கூறியுள்ளார். இவற்றை நம்பி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 55 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

ஒரே ஒரு வாட்ஸ்அப் குழு தான்.. பல லட்சம் ரூபாய் மோசடி செய்த புரோகிதர்..!

ஆனால், மணிகண்டன் பல மாதங்களாக சான்றிதழ் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பின்னர் நேரில் சென்று கேட்ட போது மணிகண்டன் சான்றிதழ் தராமல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

ஒரே ஒரு வாட்ஸ்அப் குழு தான்.. பல லட்சம் ரூபாய் மோசடி செய்த புரோகிதர்..!

விசாரணையில், அவர் இதுபோன்று ஏற்கனவே பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP