சிசிடிவியால் சிக்கி கொண்ட வெங்காய திருடர்கள்..

கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் தற்போது, சற்று விலை குறைந்துள்ளது.
 | 

சிசிடிவியால் சிக்கி கொண்ட வெங்காய திருடர்கள்..

கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் தற்போது, சற்று விலை குறைந்துள்ளது. இந்த சமயத்தில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள டோங்கிரி மாக்கெட்டில் உள்ள இரண்டு கடைகளில் இருந்து ரூ.21,160 மதிப்புள்ள 168 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, டிசம் 5 ஆம் தேதி அதிகாலை 2 நபர்கள் கடைகளில் இருந்து வெங்காயத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், வெங்காயத்தை திருடி சென்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP