மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி.. இந்திய அணியில் மீண்டும் மாற்றம்..

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 2-வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 | 

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி.. இந்திய அணியில் மீண்டும் மாற்றம்..

இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.  இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.

இதில் இந்திய அணியில் ஒருநாள் தொடருக்காக ஷிகர் தவாண் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், அவருக்கு காயம் ஏற்படவே உள்நாட்டுத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார்.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி.. இந்திய அணியில் மீண்டும் மாற்றம்..

இந்நிலையில், காயத்தில் இருந்து உடல்நலம் தேறி டி20 போட்டிகளில் விளையாடிய புவனேஷ்வர் குமார்,  மும்பையில் நடந்த போட்டியின் போது தசை பிடிப்பு ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து முழுமையாக புவனேஷ்வர் குமார் இன்னும் குணமாகவில்லை என்பதால், ஒருநாள் தொடருக்கு புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் உமேஷ் யாதவ் நல்ல உடல்நலத்துடன் இருந்தபோதிலும் ஷர்துல் தாக்கூருக்கு தேர்வுக் குழுவினர் வாய்ப்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP