ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2020 விரைவில் வருகிறது! உறுதிப்படுத்திய உணவுத்துறை அமைச்சர்!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் அமலாகவுள்ளது என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக, மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல்  நாடு முழுவதும் அமலாகவுள்ளது. தங்களின் வேலைக்காக இடம்பெயர்ந்து செல்பவர், வேலைக்காக அடிக்கடி தாங்கள் இடத்தை மாற்றிக்கொள்ளும் ஊழியர்கள் பயனடைவார்கள்’ என்றார்.

மேலும், இந்த திட்டம் அமலான பிறகு நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP