பள்ளி மாணவர்களுக்கு நர் செய்தி - முதல்வர் அதிரடி

அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் அதே நாளில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஸ்கூல் கிட் வழங்கப்பட உள்ளது. அதில், 3 செட் சீருடை, புத்தகம், காலணி, பெல்ட், புத்தகப் பை ஆகியவை இருக்கும்.
 | 

பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி!  முதல்வர் அதிரடி!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற நாள் முதல் பல நல்ல திட்டங்களை கொண்டு வருகிறார். 
பள்ளி மாணவர்களுக்கு அவருடைய அதிரடி திட்டங்கள் 

01. அன்று - இன்று என்ற திட்டத்தில் 45 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தரப்படும். முதல்கட்டமாக 15,715 பள்ளிகள் புனரமைக்கப்பட உள்ளன. அவற்றில் கழிப்பறை, சுத்தமான குடிநீா், நாற்காலிகள், மின்விசிறி, சுற்றுச்சுவா், தரமான கட்டடம், பெயிண்டிங் ஆகிய அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக செய்யப்படும்.

02.அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் அதே நாளில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஸ்கூல் கிட் வழங்கப்பட உள்ளது. அதில், 3 செட் சீருடை, புத்தகம், காலணி, பெல்ட், புத்தகப் பை ஆகியவை இருக்கும்.

03. வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டு, ஆங்கில வழிக் கல்வி திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்புக்கு உயா்த்தப்பட உள்ளது. அவ்வாறு இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி திட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏழாம் வகுப்பு என அடுத்தடுத்து எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்பட உள்ளது. அதற்கேற்ப ஆசிரியா்களுக்கும் உரிய பயிற்சி வழங்கப்பட உள்ளது. சா்வதேச அளவில் நடைபெறக்கூடிய போட்டித் தோ்வுகளிலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெறும் விதமாக கல்வித் திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எவ்வித இடையூறும் இன்றி கல்வி கற்க வசதியாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தாய் மடி திட்டத்தில் கல்வி உதவித் தொகை கிடைக்கும். அந்த பணம் பிள்ளைகளுடைய தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தியாவில் இந்த திட்டம் ஆந்திர மாநிலத்தில் முதன் முதலாக தொடக்கப்பட்டுள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP