வேலை இல்லை.. குடிக்க பணம் வேண்டும்.. அதுக்காக ஏடிஎம் இயந்திரத்தையா உடைக்கனும்!!

வேலை இல்லை.. குடிக்க பணம் வேண்டும்.. அதுக்காக ஏடிஎம் இயந்திரத்தையா உடைக்கனும்!!
 | 

வேலை இல்லை.. குடிக்க பணம் வேண்டும்.. அதுக்காக ஏடிஎம் இயந்திரத்தையா உடைக்கனும்!!

வேலை கிடைக்காத விரக்தியில் குடிப்பதற்காக ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் அரியானுர் பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. பின்னர் காலையில் ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பொதுமக்கள் கொண்டாலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
வேலை இல்லை.. குடிக்க பணம் வேண்டும்.. அதுக்காக ஏடிஎம் இயந்திரத்தையா உடைக்கனும்!!

அதில் திங்கள் கிழமை அதிகாலை முகத்தை மூடியபடி ஒருவர் ஏடிஎம் மையத்திற்கு வருவதும் பலமுறை பணம் எடுக்க முயற்சிப்பதும் பதிவாகியிருந்தது. பணம் எடுக்க முயன்றவர் ஒருகட்டத்தில் கையில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் ஏடிஎம் மெஷினின் கீழ்பாகத்தை அடித்து உடைக்க முயன்றதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளையும் பணம் எடுக்க முயன்ற கார்டின் விபரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையர் விபரம் போலீசுக்கு கிடைத்தது. அதன்படி கொள்ளையடிக்க முயன்றவர் அரியனூர் பகுதியை அடுத்த உத்தமசோழபுரத்தை சேர்ந்த 24 வயதான கார்த்திக்ராஜ் என்பது தெரிய வந்தது.

வேலை இல்லை.. குடிக்க பணம் வேண்டும்.. அதுக்காக ஏடிஎம் இயந்திரத்தையா உடைக்கனும்!!

கார்த்திக் வீட்டில் இருப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பி.எஸ்.சி. படித்த அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் சும்மா ஊர் சுற்றி வந்த அவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவ்வப்போது சிறுசிறு திருட்டில் ஈடுபட்டு கிடைக்கும் பணத்தில் குடி, சினிமா என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இனி மொத்தமாக கொள்ளையடித்துவிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என எண்ணி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முடிவு செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

வேலை இல்லை.. குடிக்க பணம் வேண்டும்.. அதுக்காக ஏடிஎம் இயந்திரத்தையா உடைக்கனும்!!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP