சிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை:சபாநாயகர் தனபால்

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த வாய்ப்பில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
 | 

சிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை:சபாநாயகர் தனபால்

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த வாய்ப்பில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். 
விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது 

                                            சிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை:சபாநாயகர் தனபால்

இந்நிலையில் இன்று காலை தமிழக சட்டசபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சிஏஏ எதிராக பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதி வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் பற்றி மட்டும் சபையில் பேசலாம் என்றும், சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் பற்றி தற்போதைய கூட்டத் தொடரில் விவாதம் நடத்த அனுமதி இல்லை என்றும் கூறினார்.
 

வண்ணாரப்பேட்டை முஸ்லீம்கள் போராட்டத்தில் திடீர் திருமணம்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP