அடுத்த வாரம் திருமணம்.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..

திருமணத்தை வைத்துக் கொண்டு செய்யும் வேலையா?.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..
 | 

அடுத்த வாரம் திருமணம்.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் ஐயனார். இவருக்கு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆகவே அவர் தன்னுடைய திருமணத்திற்காக உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழை கொடுத்து வந்தார். இந்நிலையில், திண்டிவனத்திலிருந்து மதுராந்தகம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றப்போது சிறுநாகலூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

அடுத்த வாரம் திருமணம்.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..

இதில் படுகாயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

அடுத்த வாரம் திருமணம்.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..

அங்கு வைக்கப்பட்டிருந்த ஐயனார் உடலை பார்த்து அவர்கள் கதறி அழும் காட்சி, பலரது மனதை உலுக்கியது. இந்தச் சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP