1. Home
  2. தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் PF Accountஐப் பார்க்க புதிய முறை!

அரசு ஊழியர்கள் PF Accountஐப் பார்க்க புதிய முறை!

தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் பணி செய்து வரும் ஆசிரியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள் பதிவிறக்கம் செய்துக் கொள்வதற்கும், சரி பார்ப்பதற்கும் இனி அவர்கள் GPF இணையதள முகவரிக்கு சென்று அவர்களுடைய பி.எஃப். கணக்கு எண், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பின்னர், செய்த பின்னர் பி.எஃப். எண்ணை அவர்கள் இணைய தளத்தில் பதிவு செய்தவுடன், அவர்கள் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண்கள் குறுந்தகவலாக வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களுடைய செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவலில் இருக்கும் எண்களை உள்ளீடு செய்தால் மட்டுமே அவர்களால், அவர்களுடைய பி.எஃப். கணக்கு ஸ்லிப்பை இனி பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும், பிற விவரங்களையும் அப்போது தான் சரிப் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஃப். கணக்கு குறித்த தகவல்களைப் பெறுவதற்காக இதுநாள் வரையில் செல்போன் எண்களை பதிவு செய்யாத ஆசிரியர்கள் உடனடியான தற்போது பயன்படுத்தி வரும் செல்போன் எண்களை அவர்களது கணக்கில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like