என் புருஷன் எனக்குத் தான்! 2 வயசு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் மஞ்சு. இவர் கடந்த சில நாட்களாக திருவேற்காட்டில் உள்ள கணவரின் தாய் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு ஆட்டோவில் அமர்ந்து கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 | 

இது குறித்து மஞ்சு கூறுகையில், வடமாநிலத்தை சேர்ந்தவர் ஹரி பிரசாத். திருமண தகவல் மையம் மூலமாக எனக்கும், அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு ரக்க்ஷன் என்ற 2 வயது மகன் உள்ளான். நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், எனது கணவர் திடீரென அவரது அம்மாவின் பேச்சை கேட்டுக் கொண்டு, என் வீட்டில் இருந்து கிளம்பி அவரது அம்மா வீட்டிற்கு வந்து விட்டார். நான் பலமுறை அழைத்து வரவில்லை. தற்போது என்னை பிடிக்கவில்லை என கூறி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

என் புருஷன் எனக்குத் தான்! 2 வயசு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா!

இதனால், எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி  கடந்த சில நாட்களாக அவரது தெருவில் உள்ள ஆட்டோவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

இங்கிருக்கும் மக்கள் எனக்கும், என் குழந்தைக்கும் உதவி செய்கிறார்கள். எனது கணவர் மற்றும் அவரது அம்மா இன்னும் 2 மாதங்களில் வீட்டை காலி செய்து விட்டு வேறு எங்கோ செல்லவுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவலர்கள் எனது புகாரை ஏற்க மறுத்து விட்டனர். எனக்கு என் கணவர் வேண்டும். அவருடன் நான் வாழ வேண்டும் என்பதற்காக இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP