என் பெயர் ராகுல் காந்தி,  ராகுல் சாவார்க்கர் கிடையாது! திமிறி எழுந்த ராகுல் காந்தி 

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற பாரத் பச்சாவ் பேரணியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி பாலியல் குற்றங்களைக் கண்டிக்கும் வகையில் பேசிய ரேப் இன் இந்தியா என்ற வாசகத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
 | 

மேக் இன் இந்தியா திட்டத்தை பாலியல் வன்கொடுமையோடு ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து பேரணியில் பேசிய ராகுல் காந்தி உண்மையை பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் ராகுல் சாவார்க்கர் இல்லை ராகுல் காந்தி என அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 

மேலும் மோடி போல் இந்தியாவை சீரழிக்காமல் நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP