முட்புதரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கொலை.! வடமாநிலத்தவர்கள் உள்பட 6 பேரிடம் விசாரணை.. அமைச்சர் ஆவேசம் 

முட்புதரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கொலை.! வடமாநிலத்தவர்கள் உள்பட 6 பேரிடம் விசாரணை.. அமைச்சர் ஆவேசம்
 | 

முட்புதரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கொலை.! வடமாநிலத்தவர்கள் உள்பட 6 பேரிடம் விசாரணை.. அமைச்சர் ஆவேசம் 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சுந்தரம் என்பவரின் 8 வயது மகள் வீட்டின் அருகே விளையாட சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பாத சிறுமி மறுநாள் காலையில் அப்பகுதியில் உள்ள முட்புதரில் சடலமாக காணப்பட்டார். அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு உடலில் லேசான காயங்கள் காணப்பட்டன. அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி செய்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முட்புதரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கொலை.! வடமாநிலத்தவர்கள் உள்பட 6 பேரிடம் விசாரணை.. அமைச்சர் ஆவேசம் 

இந்நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக அசாம் மாநிலத்திலிருந்து வந்து கொங்களாபுரத்தில் வசிக்கும் 3 பேரிடமும், அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை விரைந்து பிடித்து தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முட்புதரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கொலை.! வடமாநிலத்தவர்கள் உள்பட 6 பேரிடம் விசாரணை.. அமைச்சர் ஆவேசம் 

முன்னதாக சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது இந்த கொடூரத்தில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் கடும் தண்டனை பெற்று தரப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். இதேபோன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிகளை பிடித்து கடும் தண்டனை கொடுக்க பல்வேறு அரசியல் தலைவர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP