வாகன ஓட்டிகளே உஷார் !! இன்சூரன்ஸ் செய்யாத வாகனங்களுக்கு புதிய ஆப்பு!

விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு இல்லையென்றால், வாகனத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை இழப்பீடாக வழங்கலாம் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

வாகனம் விபத்தில் சிக்கினாலோ, விபத்தை ஏற்படுத்தினாலோ, மோட்டார் வாகன சட்டப்படி காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீடு பெற முடியும். ஆனால், தற்போது மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

அதன்படி, விபத்தில் மரணம், காயம் அல்லது பொருட் சேதத்தை ஏற்படுத்திய வாகனமானது, 3-வது நபர் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலோ, வாகன உரிமையாளர் காப்பீட்டு ஆவணங்களை அளிக்க தவறினாலோ அந்த வாகனத்தை ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை மாஜிஸ்திரேட் எடுக்க முடியும் என்றும் அதன் மூலம் கிடைக்கும் தொகையை, விபத்துக்கான இழப்பீட்டை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP