4 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற இவருக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு

4 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற இவருக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு
 | 

4 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற இவருக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்துக்கு உட்பட்ட நவாப்கஞ்ச் பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை ஒன்று கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் காணாமல் போனது. தலித் பிரிவை சேர்ந்த அந்த குழந்தை பின்னர் அருகில் உள்ள வயல் வெளியில் காயங்களுடன் பிணமாக கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். பின்னர் அக்குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த உமாகாந்த் (வயது 32), முராரி லால் (24) என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

4 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற இவருக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு

அவர்கள் மீதான வழக்கு பரேலி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணை முடித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அந்த இருவரும் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளான 2 இளைஞர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொலை செய்த 2 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP