1. Home
  2. தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கார்த்திகையை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் கார்த்திகையை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டு தீபத்தை பார்வையிட்டனர்.

சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான கார்த்திகை தீப விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் கடைசி நாளான இன்று மலை உச்சியில் அகண்ட தீபம் ஏற்றப்படும். இந்நிலையில் அண்ணாமலையாருக்கு அரோகரா... அரோகரா என்ற முழுக்கத்துடன் 2668 அடி உயர மலை மீது மகா தீபமும், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அகண்ட தீபமும் ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like