மதுரவாயல் பறக்கும் சாலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!! விரைவில் தீர்வு காணப்படுமென முதல்வர் உறுதி!!

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விரைவில் மதுரவாயல் பறக்கும் சாலைப் பணிகள் துவங்கும் என முதல்வர் உறுதி படக் கூறியுள்ளார்.
 | 

மதுரவாயல் பறக்கும் சாலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!! விரைவில் தீர்வு காணப்படுமென முதல்வர் உறுதி!!

தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ல் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான OPS ஆல் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதங்களும் ,விளக்கங்களும் நான்காவது நாளான நேற்று சட்டசபையில் நடைபெற்றது.

                                          மதுரவாயல் பறக்கும் சாலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!! விரைவில் தீர்வு காணப்படுமென முதல்வர் உறுதி!!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் மதுரவாயல் பறக்கும் சாலை பாதியிலேயே கைவிடப்பட்டதற்கான காரணத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். மதுரவாயல் பறக்கும் சாலை மத்திய அரசு திட்டம் .வெள்ள நீா்வழிப் பாதையில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். மாற்றுப் பாதையில் சாலை அமைக்க  ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.  மத்திய அரசின் பரிசீலணைக்கு அனுப்பப்பட்டுள்ள  காரணத்தால் அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விரைவில் சாலைப் பணிகள் துவங்கும் என முதல்வர் உறுதிபடக் கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP