4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்!!

4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்!!
 | 

4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்!!

சென்னை அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா. அவரும், பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்  என்ற இளைஞரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது அவர்கள் பல இடங்களுக்கு சுற்றி தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களுக்குள் பிரச்னைகள் ஏற்படவே வெங்கடேஷ் கவிதாவை வேண்டாமென்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கவிதா தன்னை காதலித்து மனைவியிடம் இருப்பதுபோல் என்னிடம் நடந்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வெங்கடேஷை அழைத்து வரச் சென்றபோது, அவர் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பது தெரியவந்தது.

4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்!!

பின்னர் அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்பொழுது வெங்கடேஷ் நான்கு ஆண்டுகளாக கவிதாவை காதலித்து வந்ததை ஒப்புக்கொண்டார். கவிதா அழகாக இல்லாததால் அவரை விட்டு பிரிந்ததாக வெங்கடேஷ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஏற்கனவே வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்ததாலும், மூன்று முறை கவிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாலும், வெங்கடேஷை விட்டால் பிடிக்க முடியாது என்று எண்ணியும் இந்த காதல் ஜோடிக்கு போலீசார் காவல் நிலையத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்!!

இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக இரு வீட்டாரும் காவல்நிலையம்  வரவழைக்கப்பட்டு அவர்கள் சம்மதத்துடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. காவல் நிலையத்தில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் நிகழ்ந்தது. பின்னர் இருவரிடமும் புகாரை திரும்பப் பெறுமாறு எழுதி வாங்கிக்கொண்டு போலீசார்  தம்பதிகளை வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP